2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

 இந்த ஆண்டு குரு பெயர்ச்சி வரும் 01.05.2024 மாலை 05.21 மணிக்கு மேஷ ராசியிலிருந்து கார்த்திகை 1-ம் பாதத்திலிருந்து ரிசப ராசி கார்த்திகை 2-ம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார். கால புருச தத்துவபடி இரண்டாம் வீட்டுக்கு குரு வருவது குடும்ப ஒற்றுமை, தன வரவு, தடைபட்ட பண வரவுகள் விரைவில் கிடைக்க பெறும் வாய்ப்புகள் அமையும். 
 
வெளிநாடுகளில் வாசிப்பவர்கள் பொருளாதார மேன்மை அடைவார்கள். டொலரின் மதிப்பும், யூரோவின் மதிப்பும் பிற நாடுகளில் உயர்வு ஏற்படுவதால்.. தங்க நகைகளின் விலை ஏற்றம் உண்டாகும். தங்கத்தின் விற்பனை குறைந்தாலும் இருப்பு வைத்துகொள்ள.. கொள்முதல்களில் வளர்ச்சி ஏற்படும். 
 
பருவ மழை மாற்றத்தால் சீரகம், வெந்தயம், மஞ்சள் விலை ஏற்றம் உண்டாகும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். யாரும் எதிர்பாராத சூழ்நிலை உண்டாகும். பல இடங்களில் ஆன்மீக பயிற்சி முகாம்கள், தியான பயிற்சி கூடங்கள் மூலம் மக்கள் உடல்நலனின் அக்கறை எடுத்துக் கொள்வது அதிகரிக்கும். வாழ்வாதாரங்களையும் பெருக்கி கொள்வார்கள்.
 
பெண்களின் வேலை வாய்ப்பு, திருமணம், வீடு, மனைகள், வாகனங்கள் வாங்க தேவையான வசதி வாய்ப்புகள் அமையும். தங்களின் நாட்டின் நாணயங்களின் மதிப்பை கூட்டுவதற்கு உலக வங்கியின் ஆலோசனைகளை எல்லா நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை அமையும்.
 
புதிய வியாதிகள் வராதிருக்கும்.நோய்க்கு போதுமான மருத்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வார்கள். இது மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். மழை செழிக்கும். விவசாய நிலங்களின் விளைச்சல் நன்றாக இருக்கும்.